வீரம் படத்தில் ஓடும் ரெயிலில் தொங்கியபடி துணிச்சலாக நடித்த அஜீத்!!

511

ajith

ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து பிறகு அஜீத் நடிக்கும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆரம்பம் படப்பிடிப்பக்குப் பின் தற்போது அஜீத் வீரம் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இது ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இதனால் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கும். அஜீத் பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சியில் டூப் போடுவதில்லை. அதேபோல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

வீரம் படப்பிடிப்பு பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஓடும் ரெயிலில் வெளியே தொங்கியபடி ஒரு காட்சியில் அஜீத் நடிக்க வேண்டியிருந்தது. டைரக்டர் சிவா டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அஜீத் நானே நடிக்கிறேன் என்று தைரியமாக கூறினார்.

காட்சியும் கச்சிதமாக எடுக்கப்பட்டது. அஜீத்தின் இந்த துணிச்சலை படக்குழுவினர் பாராட்டினர். பீகாரைத் தொடர்ந்து ஐதராபாத்திலும், சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.