வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்று (05.09.2016) திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நரசிங்கர் லஷ்மி சமேதராக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா நேற்றுமுன்தினம் (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வரும் 10.09.2016 சனிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும், 11.09.2016 ஞாற்றுக்கிழமை சப்பரத்திருவிழாவும், 12.09.2016 திங்கட்கிழமை தேர்திருவிழாவும், 13.09.2016 செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.




















