தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தபின் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொரட்ந்து தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் நிறைய படங்கள் வந்தன. அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.
பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் படம் நேற்று ரிலீசானது.
இந்த நிலையில் டைரக்டர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில டைரக்டர்கள் மோசடித்தனமாக நடந்துள்ளனர்.
மாயகடு தெலுங்கு படத்தில் நடித்தபோது டைரக்டர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். படத்தில் அதை பார்த்தபோது அதிர்ந்தேன். அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார். பிரேம கமாலிகம் படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளேன் என்று சார்மி கூறினார்.