திருடன் பொலிஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கியுள்ள படம் உள்குத்து. இதில் அட்டக்கத்தி தினேஷ், நந்திதா, ஸ்வேதா, சாயாசிங், பால சரவணன், ஸ்ரீமன் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் நாகர்கோவில், முட்டம் பகுதியில் நடக்கிற கதை. ஒரே ஷெட்யூலில் படத்தைமுடித்து திரும்பியிருக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா கடந்தவாரம் நடைபெற்றது.
படத்தை பற்றி இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது:வெளி உலகத்தில் சாதாரண மீன் வியாபாரியாக இருக்கும் ஹீரோ மறைவாக சில வேலைகளை செய்வார்.
அதற்குத்தான் படத்திற்கு ‘உள்குத்து’ என்று பெயர் வைத்திருக்கிறோம். மீன் வியாபாரி கரக்டர் என்பதால் தினேஷை நிஜமாகவே ஒரு மீன் கடையில் மீன் வியாபாரம் செய்ய பயிற்சி எடுக்க வைத்தோம்.
மீன் வெட்டுவது தனி டெக்னிக் தவறினால் கையை வெட்டிக் கொள்வோம். அதனால் அவர் பயிற்சி எடுத்து நடித்தார். சண்டை காட்சியில நிறைய அடிவாங்கி வலியுடன்தான் நடித்தார். படத்தில் 12 சண்டை காட்சிகள் இருக்கிறது.
நந்திதா ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறார். வாடிக்கையாளர்க ளிடம் முகம் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே செய்ய வேண்டிய வேலை அதற்கும் அவருக்கு பயிற்சி கொடுத்தோம்.
நாகர்கோவிலில் ஒரு ஜவுளி கடையில் நந்திதாவை நிஜமாகவே ஜவுளி விற்க வைத்து அதை மறைந்திருந்து படமாக்கினோம். முதலில் அவரிடம் பேரம் பேசி துணி வாங்கியவர்கள் அதன்பிறகுதான் அவர் நடிகை நந்திதா என்பதையே கண்டுபிடித்தார்கள். அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் யதார்த்தமாக இருந்தது என்றார்.






