கையில் தூக்கி செல்லக்கூடிய மினி சலவை இயந்திரம் அறிமுகம்!!

757

portable-washing-machine

கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் சிறிய சலவை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் வைத்தே சலவை இயந்திரங்களில் துணிகளை சலவை செய்ய முடியும். ஆனால் கையில் தூக்கி சென்று துணிகளை துவைக்கும் சலவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பேக் வடிவில் ஆனது. வாட்டர் புரூப் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 நிமிடத்தில் துணிகளை துவைக்க முடியும். சாதாரண சலவை இயந்திரத்தின் தரத்தில் இதன் சலவை உள்ளது.

கையில் தூக்கி செல்லும் வசதி இருப்பதால் அதை சுற்றுலா செல்லும் இடங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதில், ஜீன்ஸ், டி–சேர்ட், உள்ளாடைகள், காலுரைகள் போன்றவற்றை திரவ நிலையிலான கோப்புடன் 3 லிட்டர் தண்ணீரில் சலவை செய்யலாம்.

இந்த சலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 180 கிராம் மட்டுமே எடையுள்ள இதை மடித்து வைத்து கொள்ள முடியும்.