நான் அப்படி சொல்லவே இல்லை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுஹாசினி!!

751

suhasini

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அங்குள்ள கர்நாடக நடிகைகள், நடிகர்கள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரபல இளம் கன்னட நடிகையான ராகினி திவேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பேசி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை சுகாசினி கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த தகவல் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சுகாசினி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நான் காவிரி பிரச்னையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், இது குறித்து நான் ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் அளிக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.