இரண்டு மாதங்களில் 500 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி போக்கிமோன் கோ சாதனை!!

585

pokemon_go_soft_launch

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர் உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

உலக அளவில் போக்கிமோன் கோ பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் ஆகக்கூடுதலாக டவுன்லோட் செய்யப்பட்டு, கூகிள் பிளேயின் ஊடாக 50 மில்லியன் தடவைகள் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி என்ற பெருமை இதற்குக் கிடைக்கிறது.

இது தவிர, மிகவும் வேகமாக 500 மில்லியன் டொலர்களை ஈட்டிய விளையாட்டாகவும் போக்கிமேன்-கோ அமைந்துள்ளது.

இந்த விளையாட்டு கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 60 நாட்களுக்குள் சாதனைக்குரிய வருமானத்தை ஈட்டியிருப்பதாக ஆப் அன்னி என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

போக்கிமேன்-கோ வை நையான்ரிக் நிறுவனம் வடிவமைத்தது. இது ஐ.ஓ.எஸ் அன்ட்ரொயிட் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் முதலான கருவிகளில் விளையாடக்கூடியதாகும்.