மாடியில் இருந்து விழுந்து பலியான நோயாளி!!

780

dead

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் 3வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

80 வயதான இவர், மனநோய் காரணமாகவே குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் இவர் மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.