6 வயதுச் சிறுவன் பெயரில் 18 டிரைவிங் லைசென்ஸ்!!

1488

dl

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மங்களம் குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் பாபையா (வயது 6). இவனது ஆதார் எண்ணை ரே‌ஷன் கார்டில் பதிவு செய்தனர்.

சிறுவன் பாபையாவின் ஆதார் எண்ணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாபையாவின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வெவ்வேறு முகவரிகளில் 18 டிரைவிங் லைசென்ஸ் மோசடியாக பெறப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இவை அனைத்தும் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்சுகள் ஆகும். அனைத்து லைசென்ஸ்களிலும் வெவ்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டிரைவிங் லைசென்சுகளை யார்-யார் எடுத்தது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 6 வயது உள்ளவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது இல்லை. ஆனால் 18 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ்களை வழங்கிய அதிகாரிகள் யார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.