விஷால், சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த கார்த்தி!!

488

karthi

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய இரண்டு படங்களும் வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியாகவிருக்கின்றன.

இந்த படங்களை பார்த்து ரசிக்க வரும் ரசிகர்களுக்கு தியேட்டரில் கூடுதல் ஆச்சர்யமும் காத்திருக்கிறது. அது என்னவென்றால், எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா’படத்தின் டீஸரை அன்றைய தினம் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடவுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இந்த டீஸரை வருகிற 6ம் திகதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி’என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் முதல் படம் இது. இப்படத்தில் கார்த்தியுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.