ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். சரத்குமார், ஆதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
முதன்முறையாக மோஷன் கெப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹொலிவுட்டில் தயாரான அவதார் படத்தைப் போல் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இப்படம் தெலுங்கிலும் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீஸரை வரும் செப்.9ம் திகதி வெளியிடவுள்ளனர். இதுகுறித்து, இப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, செப்டம்பர் 9ம் திகதி கோச்சடையான் படத்தின் டீஸர் வெளியாகிறது. இதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.