கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்!!

578

acc

சாரதிகளின் நித்திரை கலக்கமே அதிக வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று அதிகாலை கிளிநொச்சி பளை – தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்திற்கும் சாரதியின் நித்திரை கலக்கமே காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் ஐவர் உயிரழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

ac

14332945_1462658970418091_8175648161340718741_n 14333197_1462658527084802_368961942835969952_n 14344243_1462657990418189_8747027591376490540_n 14359114_1462659150418073_1061322964500845077_n 14364806_1462658630418125_5215236538439027143_n 14368870_1462658147084840_1388954507359821118_n 14368927_1462658747084780_3117479338649862061_n