பேருந்தில் வைத்து சிறுமி துஷ்பிரயோகம் : வங்கி ஊழியர் ஒருவர் கைது!!

841

abuse111

சிலாபம் முதல் ஆணமடுவ வரையில் பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 56 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.