
விக்ரம் மிகவும் ஜாலியான மனிதர். எந்த விழாக்களுக்கும் சென்றாலும் எல்லோரையும் பாராட்டி தான் இவருக்கு பழக்கம், முதலில் விழாவை தொகுத்து வழங்குபவரை பாராட்டி தான் பேசவே தொடங்குவார்.சமீபத்தில் இருமுகன் படத்தை வாங்கியவர்கள் சிலர் விக்ரமை சந்தித்து படம் சூப்பர், போட்ட பணம் 3 நாளில் வந்துவிட்டது என கூறியுள்ளனர்.
இவரை வந்து பார்க்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் இப்படியே கூற, விக்ரம் ஒரு கட்டத்தில் ‘என்னை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டு நடிச்சுருக்கேன்பா’ என கிண்டலாக கூறியுள்ளார், இதை ஒரு தெலுங்கு சேனலில் விக்ரம் தெரிவித்தார்.




