பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் 21 மாத வயதான தனது மகளை பேஸ்போல் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
பொறாமை காரணமாகவே இக்கொடூரக் கொலையை செய்ததாகவும் ரையன் லோரன்ஸ் எனும் 25 வயதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இக் குழந்தையின் கண்ணில் புற்று நோய் ஏற்பட்டிருந்தது. எனினும் இக் குழந்தை குணமடைந்தவுடன் இக் குழந்தை பலரின் கவனத்தையும் ஈர்த்தமை தனக்குப் பொறாமையை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இக் கொலை இடம்பெற்றது.
இக் குழந்தையை தான் பேஸ்போல் மட்டையால் அடித்துக் கொலை செய்தபின் அதன் உடலை தீக்கிரையாக்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ரையன் லோரன்ஸுக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது. குறைந்த பட்சம் 25 வருட சிறைத் தண்டனையை அவர் எதிர்நோக்குகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.






