ஓரே வீட்டில் 4 பேர் மரணம் : சோகத்தில் மூழ்கிய கல்குடா மக்கள்!!

1256

dead

மட்­டக்­க­ளப்பு, கல்­குடா பொலிஸ் பிரி­வி­லுள்ள கல்­குடா கடலில் நீராடச் சென்ற சமயம் கடலில் மூழ்கி காணாமல் போன இரு சகோ­த­ரர்­களின் சடலங்களும் நேற்றுக் காலை கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­குடா பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் நீராடச் சென்று காணாமல் போன­வர்­களில் சண்­முகம் சதீஷ்­குமார் (21) என்பவரதும் இவரின் இளைய சகோ­த­ர­ரான சுரேஷ்­குமார் (18) என்பவரதும் சடலங்களே நேற்று மீட்கப்பட்டன.

இதே­வேளை, தங்­க­ளது பிள்­ளைகள் கடலில் மூழ்கி இறந்­துள்ள தக­வலை அறிந்து அவர்­களின் பெற்­றோ­ரான கல்­குடா பட்­டி­ய­டிச்­சேனை கிரா­மத்தைச் சேர்ந்த வேலுப்­பிள்ளை சண்­முகம் (49) கண­ப­திப்­பிள்ளை யோக­லெட்­சுமி (46) ஆகியோர் வீட்டு முற்­றத்­தி­லுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்­கொலை செய்­து­ கொண்­டனர்.

தூக்கில் தொங்கி மர­ண­ம­டைந்த வேலுப்­பிள்ளை சண்­முகம் தம்­பதியின­ருக்கு இரண்டு ஆண் பிள்­ளை­களும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளு­மாக நான்கு பிள்­ளைகள். அதில் ஒரு பெண் பிள்ளை நான்கு வரு­டங்­க­ளுக்கு முன் மர­ண­ம­டைந்­தி­ருந்தார்.

கல்­குடா விஷ்­ணு­கோயில் குறுக்கு வீதி பட்­டி­ய­டியைச் சேர்ந்த மேற்­படி இரு சகோதரர்களும் மற்றும் மூன்று நண்­பர்­க­ளு­மாக ஐவர் பிறந்த தினத்தை கடற்கரையில் கொண்­டா­டு­வ­தற்­காக பாசிக்­குடா கட­லுக்குச் சென்று அவர்­களில் நால்வர் நீராடிக் கொண்­டி­ருந்த சமயம் சுரேஷ்­குமார் என்­பவர் கட­ல­லையால் அள்ளுண்டு கொண்டு செல்­லப்­பட, சகோ­த­ர­னான சதீஷ்­குமார் அவரைக் காப்­பாற்ற முயற்­சித்­துள்ளார்.

அவ்­வே­ளையில் இரு­வரும் நீரில் மூழ்­கி­யுள்­ளனர். இதன் பின்னர் மற்­றைய இரு நண்பர்­களும் நீரில் மூழ்­கிய நிலையில் மீன­வர்­களால் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர்.

கடலில் மூழ்கி காப்­பாற்­றப்­பட்ட மாண­வர்கள் வாழைச்­சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இதே­வேளை, காணாமல் போன தனது சகோதரர்களில் ஒருவரின் சடலம் கடற்கரையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த சகோதரி மயங்கி வீழ்ந்த நிலையில் உறவினர்களால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1 dead