வவுனியா வீரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலைகள் விஷமிகளால் உடைப்பு!!

593

 
வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள வீரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலைகள் விஷமிகள் சிலரால் நேற்று(19.09.2016) நள்ளிரவில் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் பிரதேச மக்கள் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்தது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விஷமிகளால் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10