வெளிநாடு செல்ல அனுமதி கோரும் யோசித்த!!

451

478e3b37c7c77d377f0e391659b497b1_xl
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவே வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த, தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி காரணமாக யோசித்தவின் கடவுச்சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யோசித்த இந்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.