பேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய இளைஞர் : எப்படி?

501

fb_1461217601_800x420
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. தனது பேஸ்புக் பக்கத்தை பாதுகாக்க அந்நிறுவனம் பவுண்டி புரோகிராம் என்ற குறைகளை சுட்டிக்காட்டும் திட்டத்தை செயல்படுத்தியது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஹேக்கர்கள் கலந்து கொண்டு பேஸ்புக் பக்கத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பரிசுகளை பெற்றுச்செல்வர். அதுபோல இத்திட்டத்தில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அருண்(20), பலமுறை பங்கேற்று 30 லட்சம் ரூபாய் வரை வென்றுள்ளார்.

தற்போது மீண்டும் இவர் பேஸ்புக் பக்கத்தை 10 நிமிடங்களில் ஹெக்செய்து விடலாம் என நிரூபித்து காட்டியுள்ளார். இதனால் இவருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது.