அண்மையில் ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனின் அக்காவும் அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய பின்னர், சட்டரீதியான தண்டனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சந்தேக நபரை வைத்திருத்தல், பாதுகாப்பளித்தல், அரச ஊழியர்களுக்கு பொய் வாக்குமூலம் வழங்கல் போன்ற குற்றச்சாட்டுக்களில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காளை வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 05ம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது காணாமல் போயிருந்த 20 வயதுடைய கயாசன் என்ற இளைஞர், திக்குவல்லை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்து இருந்த போது, விகாரையின் தேரரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, தேரரின் உதவியுடன் இளைஞர் பொலிஸில் சரணடைந்திருந்தார்.






