
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் கல்விப்பொதுத்தராதர உயர்தரக்கல்வியை தொடர்வதற்கு கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைப்பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.இதன்மூலம் சாதாரணத்தரத்தில் தோல்விக்கண்டவர்களும் தமக்கு விருப்பமான பாடத்திட்டம் ஒன்றை உயர்தரத்தில் பயிலமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை காரணமாக, சாதாரணத்தரத்தில் தோல்விக்கண்டவர்களின் திறமைகளுக்கு இடம்தரமுடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.





