14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து குளியாப்பிட்டி உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் எச். குலதுங்க 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 25,000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஒரு இலட்ச ரூபா நஷ்டஈடு வழங்கும்படியும் நீதியரசர் உத்தரவிட்டார்.
இதற்கும் மேலதிகமாக முதலாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்த நீதியரசர், சிறைத் தண்டனைகளை ஒரேயடியாக அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆர்.கே. ஜயசேகர என்ற அலவ்வே மாமா என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.






