விபத்தில் மரணித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் மகளின் கல்விச் செலவை ஏற்ற விஷால்!!

451

vishal

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக் கார் மோதியதில் 13 முச்சக்கரவண்டிகள் சேதமடைந்தன.

அதில் முச்சக்கரவண்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9 முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் படுகாயமடைந்தார்கள்.

அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அக்குர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இறந்த ஆறுமுகத்துக்கு மணிஷா என்ற 7வயது மகள் இருப்பதை அறிந்தார். உடனே மணிஷாவின் கல்விச் செலவு அனைத்தையும் தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக அவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானம் அடைய வைத்தார். ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.