வவுனியா யாழ் பல்கலைக்கழக வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக மாறுகின்றது!!

816

uni

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22.09.2016) அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே உயர்கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டும் என புத்திஜீவிகள் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பால் கல்விச் சமூகம் உட்பட வன்னிப் பிரதேச மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.