தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய 28வது தேசிய விளையாட்டுவிழா நிகழ்வுகள் பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் இடம்பெற்றன.
இப்போட்டியில் 23.09.2016 அன்று இடம்பெற்ற 10000 மீட்டர் ஓட்டத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கே.நவநீதன் இரண்டாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்தவாரம் யாழில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






