2016 தேசிய ஆணழகர் போட்டியில் மீண்டும் வெற்றியீட்டிய மலையக இளைஞன் மாதவன் ராஜகுமாரன்!!

526

unnamed

நுவரெலியா கொத்மலை¸ லபுக்கல்ல தோட்டம், கொண்டகலை பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளிகளான மாதவன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வனான ராஜகுமாரன் தேசிய ஆணழகர் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அன்மையில் கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காண திறந்த ஆணழகர் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளராக கலந்துகொண்ட மாதவன் ராஜ்குமாரன் முதலாம் இடத்தை பெற்று, தேசிய ரீதியில் வெற்றி பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டும் இதே சாதனையைப் பெற்ற குறித்த மாணவன், மலைகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இவர் தற்போது புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வருகின்றார்.

2014 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடத்தையும் 2015 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் 1 ஆம் இடத்தையும் 2016 தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான திறந்த ஆணழகர் போட்டியில் 1 ஆம் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது விமானப்படை விளையாட்டு குழுவிற்கும் தெரிவாகியுள்ளனர்.

இந்த வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரன் தெரிவிக்கையில், எனதும் எனது அப்பாவினதும் விருப்பத்திற்கு ஏற்ப இதனை தெரிவுசெய்தேன். வார நாட்களில் பாடசாலைக்கும் மாலை வேலைகளில் உடற்பயிற்சிக்கும் சனிக்கிழமை பிரத்தியோக வகுப்பிற்கும் செல்வேன்.

அப்பாவின் உதயிவியாலும் பயிற்றுவிப்பாளர் அமில தர்மதிலக்கவின் உதவியாலும் செலவு செய்து பயிற்ச்சியை பெற்றேன். வெற்றியும் அடைந்தேன். ஆரம்பத்தில் நான் மரக்கரி தோட்டங்களில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் எனது பண தேவையை நிவர்த்தி செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 2 3