ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் : ரஜனியின் சகோதரர்!!

423

rajanikanth

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் வழங்கிய பேட்டியில்..

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார். எந்திரன் 2 படம் வேகமாக தயாராகி வருகின்றது என்று தெரிவித்தார்.