கேள்விகேட்ட ஆசிரியரை குத்திக்கொன்ற மாணவர்கள்: வகுப்பறையில் வெறிச்செயல்!!

998

625-0-560-350-160-300-053-800-668-160-90
டெல்லியில் பள்ளிக்கு வராதது குறித்து கேள்வி கேட்ட ஆசிரியரை மாணவர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நங்லோய் என்ற பகுதியில் உள்ள அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர்.

இதனால் இதுகுறித்து கேள்வி எழுப்பி ஆசிரியர் முகேஷ் குமாரை, அந்த மாணவர்கள் இருவரும் சேர்ந்து, பிற மாணவர்கள் முன்னிலையில் கத்தியால் குத்தியுள்ளனர்.இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிழந்துள்ளார்.கற்றுக்கொடுக்கும் ஆசிரியரையே கொலை செய்த மாணவர்களின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.