முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பலி!!

1037

14470681_1198329230214143_1727860359_n
முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த பிரபாகரன் சர்மிளன் என்னும் நான்கு வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று மதியம் வட்டுவாகல் ஆற்றில் குளிப்பதற்காக பெற்றோருடன் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்ற நிலையில் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.