10 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை : 42 வயது குடும்பஸ்தர் கைது!!

597

abuse

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி, ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் நேற்று ( 26) காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டள்ளார்.

மேலும், பாதிப்புக்குள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேனைள, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.