உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர்!!

254

pollution

உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் வருடத்திற்கு 6 மில்லியன் பேர் உயிரிழப்பதாக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

10 பேரில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதாகவும் அதனை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இது பொதுமக்களுக்கான அவசர சுகாதார உதவி என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Maria Neira தெரிவித்துள்ளார்.

103 நாடுகளின் 3000 நகரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எந்த நாட்டில் அதிக மாசான சூழல் காணப்படுகின்றது என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட மறுத்துள்ளது.

அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் பக்கவாதம், இதய நோய்கள் என்பவற்றுடன் புற்றுநோய் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.