இலங்கையில் வரட்சி காரணமாக ஐந்து மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் இந்த வரட்சியினால், பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பொலனறுவையே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் சிறிய குளங்கள் யாவும் வற்றிப் போயுள்ளன. நீர் மின்சார உற்பத்தி நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ரந்தெனிகல நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 40 சதவீதமாகவும், விக்டோரியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 60சதவீதமாகவும் குறைவடைந்துள்ளன.அதுபோல், கொத்மலை, ரண்டம்பே மற்றும் போவதென்ன நீர் நிலைகளில் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளன.இதேவேளை வரட்சி காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.