அம்பலன்கொட பகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெலம்பகே பிரேமசிறியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி தனது வீட்டுக்கு முன்னால் காரில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெலம்பகே பிரேமசிறி உயிரிழந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்ததோடு, நேற்றையதினம் மேலும் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் டி 56 ரக துப்பாக்கி, அதற்கான 12 ரவைகள், மெகசீன் ஒன்று, மில்லிமீற்றர் 9 வகையான பிஸ்டோல், அதற்கான நான்கு ரவைகள் மற்றும் மெகசீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் சிலரைக் கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகள் அம்பலான்கொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.