ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.






