பெண் நோயாளி ஒருவருடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த எக்ஸ்ரே நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அண்மையில் கண்டியில் அமைந்துள்ள பிரதான தனியார் மருத்துவ நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.எக்ஸ்ரே ஒன்றை எடுப்பதற்காக சென்ற பெண் ஒருவரின் ஆடைகளை களையச் சொல்லி உடல் பாகங்களை ஸ்பரிசம் செய்ய குறித்த எக்ஸ்ரே நிபுணர் முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 23 ஆண்டுகள் எக்ஸ்ரே தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் உடைய ஐம்பது வயதை அண்மித்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.நீண்ட காலகமாக தலைவலி காணப்பட்ட 32 வயதான பெண் ஒருவர் வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமைய எக்ஸ்ரே எடுத்துக்கொள்ளச்சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும், இந்த நபரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.