இந்தியாவில் பாம்பு கடித்து உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்பெற்று வரவேண்டும் என்பதற்காக சடலத்தை உப்பால் மூடி காத்திருந்த குடும்பத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா(வயது 24). நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற ருத்ரப்பாவை, விஷ பாம்பு கடித்ததாக தெரிகிறது. இது ருத்ரப்பாவுக்கு தெரியவில்லை, வீட்டிற்கு திரும்பி வந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது, பாம்பு கடித்திருப்பதாக கூறினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருத்ரப்பாக உயிரிழந்தார், இதற்கிடையே பாம்புகளை பிடிக்கும் நபர் ஒருவர் ருத்ரப்பாவின் குடும்பத்தினரிடம், பாம்பு கடித்து இறந்தவரை 12 மணி நேரத்திற்குள் என்னால் உயிர் பிழைக்க வைத்து விட முடியும்.
ருத்ரப்பாவின் உடல் மீது உப்பை போட்டு மூடினால், அவர் 12 மணி நேரத்திற்குள் உயிர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய குடும்பத்தினர், ருத்ரப்பாவின் உடலை உப்பு போட்டு மூடியுள்ளனார், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து ருத்ரப்பாவின் குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினர்.தொடர்ந்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.