பெண் திருமணம் செய்ததால் வீட்டை கொழுத்திய நபர்!!

428

large_bonfire
நீண்டகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணொருவர் மற்றுமொரு நபரை பதிவு திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு தீவைத்துள்ளார். இந்த சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் தீ காரணமாக வீடு முற்றாக அழித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும், சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீ வைத்தன் மூலம் வீட்டுக்கு 9 லட்சத்து 92 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபர் பேராதனை தலவத்த பிரதேசத்தை சேர்ந்தவர், சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.