இறப்பிலும் பிரியாத காதலர்கள் : சுவிஸில் ஒரு சோக சம்பவம்!!

825

lovers

சுவிஸின் வாட் மாகாணத்தில் நபர் ஒருவர் காதல் ஜோடியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட் மாகாணத்தில் உள்ள Lake என்ற தெருவில் வைத்து உள்ளூர் நேரப்படி 17.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தெருவில் Spa மற்றும் கடைகள் இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த தெருவில் வைத்து, 39 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடியினை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனைப்பார்த்து அருகில் இருப்பவர்கள் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆண் நபர் உயிரிழந்துவிட்டார். அப்பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இவர்களின் குடியிருப்பில் வசித்து வந்த நபரே, இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தற்போது அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இறந்துபோன ஆண்நபரின் தாயார் கூறியதாவது, எனது மகன் எப்போதும் தனது காதலியை விட்டு பிரியவேமாட்டான், அவள் மீது அளவுக்கதிமான அன்பு வைத்திருந்தான், இறப்பிலும் கூட அவர்கள் பிரியவில்லை என கூறியுள்ளார்.