அமெரிக்காவிலுள்ள பூனையொன்று 14 கிலோகிராம் (31 இறாத்தல்) எடையைக் கொண்டுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் வோட்டவிலே வெலி நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இப் பூனை வசித்து வருகிறது.
8 வருட வயதான இப் பூனைக்கு லொகான் எனப் பெயரிட்டுள்ளனர். சாதாரணப் பூனைகளின் 3 மடங்கு பெரிய அளவுடையதாக இப் பூனை உள்ளது. இந்த ஹோட் டலின் உரிமையாளர்களான சுசான் புரூன்வான்ட் மற்றும் டோர் புரூன்வான்ட் தம்பதியினர் 7 வருடங்களுக்கு முன்னர் இப் பூனையை வளர்க்க ஆரம்பித்தனர்.
தற்போது மேற்படி ஹோட்டல் வளாகத்தில் இப் பூனை அந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப் பூனையுடன் படம்
பிடித்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனராம்.
இப் பூனையின் அதிக பருமனுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அதன் இரத்தம் பரிசோதிக்கப்பட்டபோதிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
“மற்றொரு பூனையுடன் சண்டையிட்டபோது இந்த பூனை காயமடைந்து ஒரு வார காலம் முறையாக உணவு உட்கொள்ளாமல் இருந்தது. அப்போதும் இதன் எடை குறையவில்லை என சுசான் புரூன்வான்ட் தெரிவித்துள்ளார்.







