ஜெயலலிதா குணமடைய வேண்டி ஆயிரக்கணக்கானோர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் : அதிர்ச்சிப் படங்கள்!!

577

 
முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழகு குத்துதல், பால் குடம் எடுத்தல் என சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவ குழுவும் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளது.

இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி வட சென்னை மாவட்ட சார்பில் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்தல், அழகு குத்துதல் என பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரின் நேதாஜி நகர் பாலமுருகன் திருக்கோயிலில் தொடங்கி, தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் வரை வட சென்னை மாவட்ட அதிமுகவினர் ஊர்வலமாக நடந்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

j1 j2 j3 j4 j5