மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை!!

490

eb

மின்சார கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பில், மின்சார சபையினால் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இத தொடர்பில் மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவிடம் தொடர்புகொண்டபோது…

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்படுவது வழமையாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் இந்த வருடம் மின்சார கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறினார்.

மின்சார சபையினால் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறவீட்டு முறைமைகள் மற்றும் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர் காஞ்சன சிரிவர்தனவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறவீட்டு முறைமைகள் மற்றும் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர் காஞ்சன சிரிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.