இந்தியாவின் ஐதராபாத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை 16 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த முகமது அலி ஷபிர்(வயது 3) மற்றும் சில குழந்தைகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே சாலையை சேர்ந்த 16 வயது சிறுவன் பைக்கில் வந்துள்ளான்.சாலையின் நடுவே விளையாடிய ஷபிரை விலகிச் செல்லும்படி கூறியுள்ளான்.ஷபிருக்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருக்கவே, கடும் கோபமடைந்த 16 வயது சிறுவன் ஷபிர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.
ஷபிர் அலறித் துடிக்கவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த சிறுவனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.