பிச்சை எடுத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்!!

524

old

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 93 வயது மூதாட்டி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

சாலையோரத்தில் சிறிய குடிசை அமைத்து இரவு நேரங்களில் தங்கியிருந்தார். சம்பவம் நடைபெற்று அன்று குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.



மேலும் அவரை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் இருந்த 2,000 மற்றும் மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கயவர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் பிரவரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து பலாத்காரம் மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி உயிர் பிழைத்தார். இருப்பினும் அவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால், அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளின் விவரங்களை திரட்ட முடியவில்லை.