30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர்!!

626

german

ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர்.

இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார்.

அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த வருடம் உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதையடுத்து அந் நபரை பொலிஸார் வீட்டிலிருந்து வெளியேற்றி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

வீட்டுக்கு வெளியே செல்வதை அவர் விரும்பவில்லை என அந்நபரின் தாயார் தெரிவித்துள்ளார்.