10 ஆண்டுகளாக தந்தை, சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முதல்வரிடம் கதறல்!!

468

abuse

இந்தியாவின் லக்னோவில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண் தனது தந்தை மற்றும் சகோதரனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

இந்த அவமானத்துக்குரிய சம்பவம் அந்த பெண்ணின் தாய்க்கும் தெரிந்து நடந்து வந்திருக்கிறது என்பதுதான் கொடுமை.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்து வரும் ஜனதா தர்ஷன் என்ற மக்களை நேரிடியாக சந்தித்துப் பேசும் நிகழ்ச்சியின் போது 25 வயதான பெண் தனக்கு நேரிட்ட இந்த கொடுமையைக் கூறி அழுதார்.



உடனடியாக அகிலேஷ் யாதவ் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.