வடக்கு மாகாணசபை தேர்தலை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் எலிஸ்டர் பெய்ர்ட் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வடக்கு மாகாணசபை தேர்தலின் போது பணியாற்றுவதாக பெய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது மாலைத்தீவில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொதுநலவாய கண்காணிப்பாளர்கள், இந்த மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள இலங்கையின் வடமாகாண தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் தெரிவித்துள்ளார்.