சம்சுங் நிறுவனத்தின் கலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிவதாக தொடர் புகார்கள் வருவதால் அதன் உற்பத்தியை சம்சுங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
உலகில் உள்ள முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சம்சுங் முக்கியமான இடத்தில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அப்படி புகார் கூறிய வாடிக்கையாளர்களுக்கு அதே ரக மாடலில் வேறு போனை நிறுவனம் தர அதுவும் தீ பிடித்து வெடிப்பதாக புகார் எழுந்தது.
பேட்டரி பிரச்சனையால் தான் அது சூடாகி வெடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பி வருவதால் சம்சுங் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.
இந்த பிரச்சனை தொடர்வதால் தற்காலிகமாக கலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை சம்சுங் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக Yonhap News Agency அறிக்கை கூறியிருக்கிறது. இந்த செய்தியை சாம்சங் நிறுவனம் மறுக்கவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.
The Consumer Product Safety Commission என்னும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.