ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்ஸி. அதன் பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாத டாப்ஸி தற்போது பொலிவூட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார்.
அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த பிங்க் படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால் டாப்ஸிக்கு ஏறுமுகம்தான். தற்போது அவர் நாம் ஷபானா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது முன்பு வெளிவந்துஹிட்டான பேபி படத்தின் இரண்டாம் பாகம் இது. மனோஸ் பாஜ்பாய், பிருத்விராஜ் நடிக்கிறார்கள். அக் ஷய்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இதில் டாப்ஸிக்கு எக்ஷன் கெரக்டர். இதற்காக அவர் கிரவ் மஹா என்ற இஸ்ரேலிய தற்காப்புகலையையும், அய்கிடோ என்ற ஜப்பானிய தற்காப்பு கலையையும் கற்று வருகிறார்.
இதற்காக தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பமாகிறது.






