காதலி மீது சந்தேகம் : உளவு பார்ப்பதற்காக புர்கா அணிந்த பெண் போன்று நடமாடிய காதலன்!!

1134

faceveil

கம்­பஹா பிர­தே­சத்தில் தனது காத­லியை உளவு பார்ப்­ப­தற்­காக பெண் வேடம் தரித்து நட­மா­டிய நபரொ­ருவர் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதன் பின்னர் கடும் எச்­ச­ரிக்கை மத்­தியில் விடுவிக்கப்பட்­டுள்ளார்.

இந்­நபர் நீண்­ட­கா­ல­மாக பெண் ஒரு­வரை காத­லித்து வந்த நிலையில் சில கால­மாக அப்­பெண்­ணுக்கு வேறொரு காதலன் இருப்­ப­தாக சந்­தேகம் கொண்டு அவரை உளவு பார்ப்­ப­தற்­கென புர்கா அணிந்து பெண்­களை போன்று கவுனும் அணிந்து அவரை பின்­தொ­டர நினைத்து கம்­பஹா ரயில் நிலை­யத்தில் அமர்ந்­தி­ருந்­துள்ளார்.

இவர் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா அணிந்த போதிலும் கண்கள் இரண்டும் வெளியில் தெரியும் வகையில் அதனை அணிந்­துள்ளார்.

வழ­மை­யான பெண்­க­ளுக்கு போன்­றல்­லாது இவ­ருக்கு சற்று பெரிய புரு­வங்கள் காணப்பட்டமையினால் சந்­தேகம் கொண்ட சிலர் அந்­ந­ப­ருக்கு அருகில் சென்று சோத­னை­யிட்ட போது அவர் ஒரு ஆண் என தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து இந்­நபர் ரயில் நிலை­யத்தில் இருந்­த­வர்­களால் பிடிக்­கப்­பட்டு கம்­பஹா பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

பொலிஸார் விசா­ர­ணைகள் மேற்­கொண்ட போது தனது காத­லியை உளவு பார்ப்­ப­தற்­காக இவ்­வாறு பெண் வேடம் அணிந்­த­தாக அவர் ஒப்புக் கொண்­டுள்ளார்.

அதன்­பின்னர் அவரை பொலிஸார் கடு­மை­யாக எச்சரித்ததுடன் அவரது பெண்ணாடையையும் திருப்பிக் கொடுத்து விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.