ஊளைச் சதையால் அவஸ்தையா : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

562

fat

ஆண்கள் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு தங்களின் பணிகளை செய்வதுடன், பாஸ்ட்புட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், ஊளைச் சதைகள் ஏற்படுகிறது.

பெண்கள் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொள்வது, சத்தான உணவுகளை உட்கொள்ளாமல், பகலில் அதிக நேரம் பகலில் தூங்குவது போன்ற காரணங்களினால் அவர்களுக்கு ஊளைச் சதைகள் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான ஊளைச் சதைகளை மிகவும் எளிமையான முறையில் குறைப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ் இதோ..



நாம் தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக சோம்பு கலந்த தண்ணீரை அருந்தி வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீங்கி, ஊளைச் சதைகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கிறது.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து. உடலிற்கு புத்துணர்ச்சி ஒல்லியான உடலமைப்பு கிடைக்கும்.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் பப்பாளிக்காயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து அழகாகக் காணப்படும்.
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரலாம். மேலும் அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் பாலில் காய்ச்சி தினமும் குடித்து வந்தால் ஊளைச் சதைகள் குறைந்து, உடல் எடையும் குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 முறைகள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் ஊளைச்சதை போடுவதைத் தடுப்பதற்கு தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் தினமும் குடித்து வரவேண்டும்.

வாழைத்தண்டு சாறு மற்றும் அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால், ஊளைச்சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் இதனுடன் அதிகாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால், உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.